Header Ads

குழந்தையின் கண்களின் பார்வைத்திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா?


                    பச்சிளம் குழந்தையின் பார்வை திறன் முழுவதும் வளர்ச்சி அடையாத நிலையிலேயே இருக்கும்.குழந்தை வளர வளர அதன் பார்வை திறன் முழு வளர்ச்சி அடைகிறது. பார்வைதிறன் முழுமையாக செயல்பட ஒரு வருடம் வரை ஆகும். பிறந்த குழந்தைகளுக்கு நிறங்கள் தெரிவது இல்லை.தொடக்கத்தில் கருப்பு வெள்ளை நிறம் மட்டுமே அதற்கு தெரிவதால் தாயின் கண்களை மட்டும் முதலில் காண ஆரம்பிக்கிறது. தாய் குழந்தைக்கு பாலூட்டும் போதும் கொஞ்சும் போதும் தொடக்கத்தில் தாயின் கண்களின் கருப்பு வெள்ளை நிறங்களை கண்டே தாயுடன் உறவாடும். ஒருவாரகால வளர்ச்சிக்கு பின் பளீர் நிறங்களை பார்த்தால் கண் சிமிட்டும் திறன் உடையவைகளாக வளர்ச்சியடையும் குழந்தையின் கண்கள் நகரும் பொருட்களை (Track) கவனிக்கும் தன்மையையும் பெறுகின்றன.ஆனால் 15-20 சென்டி மீட்டர் இடைவெளியில் மட்டுமே குழந்தையால் பார்க்கமுடியும் என்பதால் குழந்தைகளை நாம் கொஞ்சுவதால் அருகில் பார்க்கும் மனித முக வடிவமைப்பை முதலில் கண்டு பழகுகிறது.


         இரண்டு வாரங்களில் தாயின் முகத்தையும் அந்நிய முகத்தையும் வேறுபடுத்தி தெளிவு பெறும் திறன் பெறுகின்றன. இப்படியே படிப்படியாக நிறங்களை வேறுபடுத்தி அறிவது, பொருட்கள் உள்ள தொலைவை அறிவது, அதன் முப்பரிமாண தோற்றத்தை நிதானிப்பது போன்ற அடுத்த கட்ட வளர்ச்சிகள் ஒரு வருட கால அளவில் முழுமை பெறுகின்றன.



கண் அடிக்கடி பொங்குதல் மற்றும் இமை ஓட்டிகொள்வது ஏன்? அதை எவ்வாறு சரி செய்வது?

         பிறந்த குழந்தைகளால் கண்ணீர் சிந்த முடியாது. ஏனெனில் கண்ணீர் சுரப்பியின் துளைகள் அடைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.இதனால் தூசி மற்றும் அழுக்கு காரணமாக எளிதில் கண்களில் கிருமி தொற்று ஏற்படும் நிலை உருவாகிறது. இந்த கண்ணீர் சுரப்பியின் (Lacrimal Duct) துளைகள் அடைபட்டு இருப்பதால்தான் கண்கள் பொங்குதல் இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற தொந்தரவு ஏற்படுகிறது.  தினமும் 15 முறை வரை கண்களின் ஓரம் உள்ள மூக்கு பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் துளைகள் திறக்கும். இதை தான் நம் முன்னோர்கள் மூக்கை பிடித்து விடுதல் என்று சொல்லுவார்கள். அப்படி செய்வதனால் கண்ணீர் துளைகள் திறந்து கண் பொங்குதல் போன்ற பிரச்சினை ஏற்படுவது இல்லை.

குழந்தையின் கண் பார்வையை பரிசோதிக்க முடியுமா?

      ROP ஸ்க்ரீனிங் என்பது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படும் குழந்தைகளுக்கான பார்வையை பரிசோதிக்கும் முறை ஆகும்.

நாமே கூட சில வழிமுறைகளை கொண்டு குழந்தையின் கண் பார்வை சரியாக வேலை செய்கிறதா என கண்டறிய மேலே சொன்னபடி பளீர் நிற பொருட்களை அருகே கொண்டு செல்லும் போது குழந்தையின் கண்களின் அசைவு மற்றும் நகர்வு கொண்டு கண்டறியலாம்.

பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!


       குழந்தைகளின் கண்களுக்கு மை தீட்டுவதால் அது கண்களுக்கு உள்ளே பட்டு கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.

         கூர்மையான விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களின் குழந்தைகள் அதைக்கொண்டு கண்களை சேதப்படுத்துவது உண்டு.

      குழந்தையின் கண்கள் சிறிதாக உள்ளது, ஆழத்தில் இருக்கிறது இன்னும் வெளியே வர வேண்டும் என்று சொல்லி கண்களுக்குள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இடுதல் ஒரு மூட நம்பிக்கை ஆகும்.அவ்வாறு செய்வது தவறு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

   குழந்தையை புகைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி குழந்தையின் கண்களில் ப்ளாஷ் ஒளியை செலுத்த கூடாது. (Flash) ப்ளாஷை அணைத்துவிட்டதை உறுதிபடுத்திய பின் புகைப்படம் எடுங்கள்.

   சிறு குழந்தைகளின் அழுகையை சமாளிக்க மற்றும் சாப்பிட வைக்க செல்போன் கொடுத்து பார்க்க வைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. அதிகமாக செல்போனை கண்களுக்கு கிட்டே வைத்து பார்த்தல் மற்றும் தொலைகாட்சியின் மிக அருகில் இருந்து பார்ப்பதால் பார்வைத்திறன் குறைந்து சிறு வையதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது.

   அனைத்திற்கும் மேல் மிக முக்கியமாக தாய்ப்பால் குழந்தையின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. குழந்தையின் நல்ல ஆரோக்கியமான பார்வைதிறனில் தாய்பாலின் ஊட்டச்சத்து முக்கிய பங்காற்றுவதால் முடிந்த அளவு பவுடர் பாலை தவிர்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.