Header Ads

குழந்தை வளர்ப்பில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களுக்கான தீர்வுகள்:

 


 பொதுவான சந்தேகங்களுக்கான தீர்வுகள்:

1. வாரத்தில் எத்தனை முறை குழந்தையின் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கலாம்?
  வாரத்தில் ஒருமுறை குழந்தையின் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து காலை வேளையில் சற்று வெயில் ஏறியதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கவும்.
மாலை நேர குளியல் தவிர்க்கவும்.ஒருவேளை மழைக்காலமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து நன்றாக பிழிந்து பின்னர் அதை வைத்து துடைத்து எடுத்தால் போதும்..

2.குழந்தையை குளிக்க வைத்தப்பின் என்ன செய்ய வேண்டும்?
     குழந்தையை குளிக்க வைத்தப்பின் முதலில் குழந்தையின் தலையை நன்றாக துடைத்து எடுக்கவேண்டும்.தலையில்  ஈரம் இருந்தால் எளிதில் குழந்தைக்கு சளி பிடிக்கும்.ஆகவே முதலில் குழந்தையின் உடலை துடைப்பதற்கு முன் தலையை நன்றாக துடைக்கவும்.

3.குழந்தையை குளிக்க வைத்தப்பின் என்ன  செய்யக்கூடாது?
     குழந்தையை குளிக்க வைத்தப்பின் குழந்தையின் காது மூக்கில் ஊதக்கூடாது..குழந்தையின் மூக்கில் வாய் வைத்து சளி எடுக்கிறேன் என்று உறிஞசி எடுக்கக்கூடாது..
இப்படி செய்தால் அது குழந்தையின் நுரையீரலைப் பாதிக்கும்..


4.குழந்தையின் கண்ணில் எண்ணெய் ஊற்றலாமா?
       குழந்தையின் கண்ணில் எண்ணெய் ஊற்றக்கூடாது.அப்படி செய்தால் குழந்தையின் கண் ஒன்றும் பெரிதாக போவதில்லை..மாறாக அது கண்ணில் நோய்க்கிருமி தாக்கத்தை ஏற்படுத்தும்.

5.குழந்தையின் தொப்புளில் காசு வைத்தல் அல்லது மிளகு வைத்தல் சரியா?
     குழந்தையின் தொப்புளில் சிலர் காசு அல்லது மிளகு அல்லது சுருட்டு கொண்டு சூடு வைக்கிறார்கள்..காரணம் கேட்டால் தொப்புள் வழியாக காற்று சென்று தொப்புள் ஊதி விடுமாம் பெரிதாகி விடுமாம்..இது முற்றிலும் பொய்.
இப்படி செய்வதால் தொப்புளில் காற்றுப்படாமல் அந்த இடம் புண்ணாகி விடும்.இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..குளிக்கவைத்தவுடன் தொப்புளில் ஈரம் இல்லாமல் துடைக்கவேண்டும்..காற்றுப்பட அனுமதிக்க வேண்டும்..தொப்புளை சுற்றி சிவப்பாக காணப்பட்டாலோ தொப்புளில் இருந்து நீர் அல்லது சலம் வந்தாலோ சற்றும் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்..தாமதித்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

6.குழந்தையை குளிக்க வைத்தப்பின் உரப்பு மருந்து கொடுக்கலாமா?
  நிச்சயம் கூடாது..அப்படி செய்தால் குழந்தையின் குடலை பாதித்து வயிறு உப்பி வாந்தி வயிற்றோட்டம் ஏற்படுத்தும்.ஆறு மாதத்திற்கு குழந்தையின் உடல் தாய்ப்பாலை தவிர மற்றெதையும் ஏற்காது.

7.குழந்தைக்கு மஞ்சள் காமாலை போன்று தெரிகிறது..சூரிய ஒளியில் வைத்தால் போதுமானதா?
    நிச்சயம் இல்லை..சூரிய ஒளியால் நிச்சயம் மஞ்சள் காமாலையை சரி செய்ய இயலாது…phototherapy எனப்படும் சிகிச்சை அவசியம்.

8.குழந்தையின் கண் பொங்குகிறது..உடல் சூடு காரணமா?
        இல்லை இல்லவே இல்லை…குழந்தையின் கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பியின் துளை அடைப்பட்டுள்ளதால் கண் பொங்கும்..இதை சரி செய்யாத பட்சத்தில் கண்ணில் தொற்று ஏற்படும்..இதை சரி செய்ய antibiotic eyedrops அவசியம்

No comments

Powered by Blogger.