Header Ads

நான்கு முதல் ஆறு மாத குழந்தை உங்கள் வீட்டில் உள்ளதா?


4-6மாத குழந்தை உங்கள் வீட்டில் உள்ளதா?   ஆரோக்கியமாக வளருகிறதா? இந்த மாதத்தில் பெரும்பாலான குழந்தைகள் செய்யக்கூடிய செயல்கள் என்ன?

வாங்க படிக்கலாம்,தெரிஞ்சுக்கலாம்.

1.இம்மாதங்களில் தான் குழந்தை பிறரின் உதவியுடன் உட்காரும்.

2.குழந்தையை நேராக பிடிக்கும் போது தலையை உறுதியாக வைக்கும்.

3.சத்தம் வரும் திசையை நோக்கி தலையை திருப்பும்.

4.பொருட்களை பிடிப்பதற்கும் அடைவதற்கும் முயற்சி செய்யும்.

5.உரக்க சிரிக்கும் அல்லது தா,பா,என்று சத்தமிட்டு கொண்டிருக்கும்.

6.குழந்தை அழாமல் இருக்கும்போது அ,இ,ஈ,உ என்று சத்தமிட்டு கொண்டிருக்கும்.

7.தன்னைத்தானே கண்ணாடியில் பார்க்க விரும்பும்.

நீங்கள் செய்ய வேண்டியது:

குழந்தை உங்கள் குரல்களை பின்தொடர்ந்து அதேபோல் ஒலி எழுப்பும்.

நீங்களும் அதுபோல் ஒலி எழுப்பி அவர்களுடன் கலந்துரையாடவும்.

குழந்தை எடுப்பதற்கும் பிடிப்பதற்கும் தரைமீது தூண்ட கூடிய பொருட்களை போடவும்.

குழந்தையை வெளியில் எடுத்து  சென்று வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்யவும்.

குழந்தை தன்னுடைய வசதிக்காக கட்டை விரல் மற்றும் பிற விரல்களை வாயில் வைத்து சப்பும்.

இது பயப்பட தேவையில்லை.இதனை குழந்தையின் ஆரம்ப பருவத்தில் நிறுத்த தேவையில்லை.


எப்போது கவலைக்கொள்ள வேண்டும்?

1.தலை நிற்காதிருக்கும்போது.

2.பிறரின் உதவியுடன் கூட உட்கார முடியாதிருக்கும் போது.

3.தன்னுடைய அருகாமையில் பொருட்கள் இருந்தாலும் கூட அதனை பிடிக்க முடியாதிருக்கும் போது.

4.ஆ,ஈ,உ என்று விதவிதமான ஒலியினை எழுப்பியும் சத்தம் எழுப்பாதிருக்கும்போது.

5.நகரும் பொருட்களை தொடர்வதற்கும் தேடுவதற்கும் தலை மற்றும் கண்களை நகர்த்தாதிருக்கும் போது.

6.குழந்தை கவிழ்ந்து படுத்திருக்கும்போது தலையை நிமிர்த்த முடியாத போது.

மேல் குறிப்பிட்டவைகளில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் கூட அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொண்டுசென்று குழந்தையை பரிசோதனை செய்யுங்கள்.

உரிய நேரத்தில் கொடுக்கும் சிகிச்சையால் குழந்தையின் செயல்திறன் அதிக அளவு பாதிக்கபடாமல் காப்பாற்றலாம்.


No comments

Powered by Blogger.