Header Ads

உங்களுக்கு தெரியுமா உங்கள் குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்கிறதா என்று?

 

உங்களுக்கு தெரியுமா உங்கள் குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்கிறதா என்று? 




இரண்டு -மூன்று மாத கைக்குழந்தை உள்ளதா உங்கள் வீட்டில்?

முதலில் இதை படியுங்கள்.

1.இரண்டு -மூன்று மாத குழந்தை இம்மாதத்தில் தாயின் முகத்தை அடையாளம் கண்டுக்கொள்ளும்.
.

2.புன்னகை செய்யும்.
.

3.கண்களை உற்று நோக்கும்.
.

4.குழந்தை கவிழும் போது தலையை தூக்கும்.
.

5.கைகளை நன்றாக திறந்தும்விரித்தும்வைக்கும்.

6.குழந்தை உற்சாகமாக இருக்கும்போது இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளையும் அசைக்கும்.

உங்கள் 2-3மாத குழந்தை மேலே கூறப்பட்ட அனைத்தும் செய்தால் ஆரோக்கியமாக வளருகிறது என்று அர்த்தம்..

நீங்கள் செய்ய வேண்டியவை:

# குழந்தையின் கை மற்றும் கால்களை மென்மையாக மசாஜ் செய்யவும்.

#தினமும் குழந்தையை நன்றாக அணைத்து அதனுடன் விளையாட வேண்டும்.
.

#நன்றாக பாதுகாப்பாக அணைப்பதாலும் குழந்தையின் அழுகைக்கு உடனடியாக செவி சாய்ப்பதாலும் குழந்தை சிறப்பாக வளரும்.

#குழந்தையுடன் தினமும் உங்கள் தாய் மொழியில் பேசுங்கள்.
.

#குழந்தைக்கு 30செமீ.உயரத்தில் பல வண்ணங்கள் கொண்ட விளையாட்டு பொருட்களை தொங்க விடவும்..இதனால் குழந்தை உற்றுப்பார்க்கும் அதனை தொடுவதற்கும் ஏதுவாகும்.
.

#குழந்தைகளிடம் மின்னனு ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது.

ஒருவேளை உங்கள் குழந்தையால் கீழ் குறிப்பிட்ட காரியங்களை செய்யமுடியாவிட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்துகிறேன்.

1.என் குழந்தையிடம் புன்முறுவல் (அ)சிரிப்பு இல்லை.

2.என் குழந்தையிடம் பேசும்போதும் கொஞ்சும் போதும் என்னை பார்க்காமல் கண்களை வேறெ எங்கேயோ கொண்டுசெல்கிறது.

3.அதிகமான சத்தமோ ஓசையோ எழுப்பினாலும் குழந்தையிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.

4.2மாதங்களுக்கு பிறகும் மாறுகண் உள்ளது.

5.கை,கால்கள் விரைத்த நிலையில் தலையை மட்டும் பின்னோக்கி தள்ளி இருத்தல்.

6.நிரந்தரமாகவோ /தொடர்ந்தோ கட்டை விரல் கைகளுக்குள் மடிந்து இருத்தல்.

ஆரம்பத்தில் குறைகளை கண்டுப்பிடித்தால் பாதிப்புகள் குறைவு..

ஒரு தாய் தன் குழந்தையின் அத்தனை அசைவுகளையும் கவனிக்கிறாள்..ஒரு சிறந்த தாய் பல மாற்று திறனாளிகள் உருவாகுவதை தடுக்கலாம்.

தாயே சால சிறந்த மருத்துவர்..

No comments

Powered by Blogger.