உங்கள் குழந்தையின் காது கேட்கும் திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உங்கள் குழந்தையின் காது கேட்கும் திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு ஐம்புலன்களில் முதலில் வேலை செய்ய ஆரம்பிப்பது காதுதான்!சிசு வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறன் செயல்பட ஆரம்பிக்கிறதால்தான் கர்பிணிப்பெண்கள் வளையல் அணிவது நமது கலாச்சாரமாக உள்ளது. வயிற்றில் உள்ள சிசு 18 வாரங்களிலேயே அதாவது ஐந்து மாதத்திற்குள்ளேயே சத்தத்தை கேட்டு உணர ஆரம்பிக்கிறது. அப்படி என்றால் அதன் செவிப்பறைகள் எவ்வளவு மென்மையாக இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் .
இப்படி ஐந்து மாதங்களில் இருந்தே தாயின் சத்தத்தை கேட்டே வளர்வதால , குழந்தை பிறந்த பின்பும் தாயின் சத்தத்தை துல்லியமாக கண்டுபிடிக்கும். அதனால் தான் அழும் குழந்தை தாயின் குரல் கேட்டதும் உடனே அமைதியடைகிறது.
குழந்தையின் கேட்கும் திறனை எப்படி பரிசோதிப்பது?
அனைத்து அரசு மருத்துவமணைகளிலும் OAE (Otto Acoustic Emission)
என்ற பரிசோதனை குழந்தையின் கேட்கும் திறனை பரிசோதிக்க பயன்படுத்தப்படுகிறது.
கொஞ்சம் வளர்ந்த குழந்தை எனில் நாமே கூட வீட்டில் சிறு சோதனைகளின் மூலமாக நம் குழந்தையின் கேட்கும் திறனை பரிசோதிக்கலாம்.
மறைவாய் இருந்துகொண்டு சப்தம் கொடுத்து குழந்தை உடனே திரும்புகிறதா என பரிசோதிக்கலாம். பக்கத்து அறையில் இருந்து சப்தம் கொடுத்து குழந்தை சரியாக நம்மை தேடி பிடிக்கிறதா என்று பரிசோதிக்கலாம்.
பச்சிளம் குழந்தைகள் அதிக சப்தம் (High Pitch sound) கேட்கும் பொழுது முதலில் கண் சிமிட்டி உடலை சிலிர்க்கும் (பயந்த நிலையில்)
மெதுவான மெல்லிய சப்தம் (Low pitch sound) குழந்தையை அமைதிப் படுத்தும்.இதனால் தான் தாலாட்டு பாட்டு கேட்டு குழந்தை தூங்குகிறது.
இது போன்ற எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் குழந்தை இருக்கும் பட்சத்தில் அதன் கேட்கும் திறன் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்க வாய்ப்புண்டு. கேட்கும் திறம் இல்லை என்றால் குழந்தைகள் பேசும் திறனும் இல்லாமல் இருக்கும்.
குழந்தையின் கேட்கும் திறன் குறைபாட்டிற்கான காரணங்கள்.
1. பிறவிக்குறைபாடு
இது குழந்தை கருவிலிருக்கும் போதே ஏற்படும் பாதிப்பினால் வருகிறது. கர்ப்பமாய் இருக்கும்போது தாய்க்கு தட்டம்மை (Measles) (Herpes) போன்ற நோய் தொற்று ஏற்படும் போது அது கருவிலுள்ள சிசுவின் செவித்திறனை பாதிக்கிறது
2. பிறந்த பின் ஏற்படும் குறைபாடு( After Birth)
அதனால் தான் Nicu (new born care unit) or SNCU (Sick newborn care unit)ல் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் 7நாட்கள் அல்லது அதற்கு அதிகமாக IV(intra venous) நோய் தடுப்பு மருந்து (Anti biotic like Gentamycin, amikacin) கிடைக்கப்பெறும் குழந்தைகளுக்கு OAE screening பரிந்துரைக்கபடுகிறது.
OAE SCREENING என்றால் என்ன?
ஒரு சிறிய probe அல்லது microphone காதின் உள்ளே பொருத்தப்பட்டு அது கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்,, இந்த probe இன் மூலம் சப்தம் உட்செழுத்தப்படும் போது காதின் உள்ளே ஒரு எதிரொலி (Echo) உண்டாகும். அந்த எதிரொலி microphone கொண்டு பதிவு செய்து கணினிக்கு அனுப்பும்.
அந்த அளவீட்டின் அடிப்படையில் காது கேட்கும் திறன் சோதனை செய்யப்படுகிறது.
பெற்றோர் செய்யக்கூடாதவை
- காதில் அழுக்கு எடுக்கும் முயற்சி வேண்டாம்
- பச்சிளம் குழந்தையை குளிக்க வைத்தவுடன் காதில் ஊதக் கூடாது.
- காதில் சீல் வடிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் மாறாக நாட்டு வைத்தியம் என்ற பெயரில் தவறான வைத்திய முறைகளை கையாளக்கூடாது.
- குழந்தை தொட்டில் அருகே ஒலிபெருக்கி அல்லது தொலைகாட்சியில் சப்தம் அதிகமாக வைத்தல்
- குழந்தையின் காதில் சப்தம் எழுப்பி விளையாடுதல்
- தீபாவளி போன்ற பண்டிகையில் போடப்படும் வெடி சப்தம்
- முக்கியமாக நோய் தொற்று ஏற்படாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
No comments