Header Ads

குழந்தைக்கு தடுப்பூசி போடும் பெற்றோரா நீங்கள்?

 





குழந்தைக்கு தடுப்பூசி போடும் பெற்றோரா நீங்கள்?? எந்த தடுப்பூசி எந்த நோயை தடுக்கும் தெரியுமா??இது உங்களுக்கான பதிவு



குழந்தை பிறந்த 24மணி நேரத்தில் போடும் தடுப்பூசிக்கு பெயர் ஹெப்பட்டைடிஸ் பி (hep B)....இது குழந்தைக்கு கல்லீரல் (liver)சம்மந்தப்பட்ட நோய்கள் (மஞ்சள்காமாலை) மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும்...இதனுடன் சேர்த்து சில மருத்துவமனைகளில் விட்டமின் K ஊசியும் போடுவர்..இது பிறந்த குழந்தையின் உடலின் ரத்தம் உறைதல் சக்தியை கொடுக்கும்..

பிசிஜி,ஒபிவி..இதுவும் குழந்தை பிறந்தவுடன் போடக்கூடிய தடுப்பூசி..குழந்தையின் உடல்நிலை சரியில்லாத போது சிறிது காலம் கழித்து போடுவார்கள்..BCG காசநோயை (TB)தடுக்கும்.

OPV இது இளம்பிள்ளை வாதம்( polio)வை தடுக்கும்..
ஒன்றரை மாதத்தில்(45நாட்களில்):

ஒபிவி(OPV)1,பெண்டா1(penta 1),ரோட்டா1(rotta 1),ஐபிவி1(IPV1),பிசிவி1(PCV1)போடப்படும்.

ஐபிவி1(IPV1)-இளம்பிள்ளை வாதம் நோயை தடுக்கும்.

பெண்டா1(penta1)-கக்குவான் இருமல்,தொண்டை அடைப்பான்,இரணஜன்னி,கல்லீரல் நோய் மற்றும் இன்புளூயன்சா தொற்று நோய்களை தடுக்கும்.

ரோட்டா1(rotta1)-வயிற்றுப்போக்கினை தடுக்கும்.

பிசிவி1(PCv1)-நிமோனியாவை தடுக்கும்.
இரண்டரை மாதத்தில்(75 நாட்களில்)

ஒபிவி2,பெண்டா2,ரோட்டா2 போடப்படும்
மூன்றரை மாதத்தில் (90நாட்களில்)

ஒபிவி3,பெண்டா 3,ரோட்டா3,ஐபிவி2,பிசிவி2 போடப்படும்...
ஒன்பதாவது மாதத்தில்

எம்.ஆர்.1(MR1),ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 1(Japanese encephalitis-1),விட்டமின் A,பிசிஜி booster dose போடப்படும்.

எம்.ஆர் 1(MR 1)-தட்டம்மை,ரூபெல்லா நோயை தடுக்கும்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 1(JE 1)-மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்கும்.
16-24 மாதங்களுக்குள்

டிபிடி(DPT),விட்டமின் A2,எம்.ஆர்.2,மூளைக்காய்ச்சல் 2,ஒபிவிbooster.போடப்படும்.
பெற்றோர்களே மேலே குறிப்பிட்ட தடுப்பூசிகளில் பிசிவியை தவிர மற்ற அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக நமது அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது.தயவு செய்து உங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு சரியான காலத்தில் தடுப்பூசியை போட்டு நோயில்லா இந்தியாவை உருவாக்க உதவிடுங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.



No comments

Powered by Blogger.