சொல்லும் பொருளும்-11 ஆம் வகுப்பு இயல்கள்-04-08
சொல்லும் பொருளும்
11 ஆம் வகுப்பு
இயல்கள்...4,5,6,7,8
பிரசம் - *தேன்*
புடைத்தல் - *கோல்கொண்டு மிரட்டுதல்*
கொழுநன் குடி - *கணவனுடைய வீடு*
வறன் - *வறுமை*
கொழுச்சோறு - *பெருஞ்செல்வம்*
உள்ளாள் - *நினையாள்*
மதுகை - *பெருமிதம்*
இகக்கும் - *நீக்கும்*
இழுக்கு - *குற்றம்*
வினாயவை - *கேட்டவை*
வரை - *மலை*
கம்பலை - *பேரொலி*
புடவி - *உலகம்*
எய்தல் - *அடைதல்*
துன்ன - *நெருங்கிய*
வாரணம் - *யானை*
பூரணம் - *நிறைவு*
நல்கல் - *அழித்தல்*
வதுவை - *திருமணம்*
கோன் - *அரசன்*
மறுவிலா - *குற்றம் இல்லாத*
தெண்டிரை - *தெள்ளிய நீரலை*
விண்டு - *திறந்து*
மண்டிய - *நிறைந்த*
தீன் - *மார்க்கம்*
கொண்மூ - *மேகம்*
விசும்பு - *வானம்*
சமம் - *போர்*
அரவம் - *ஆரவாரம்*
ஆயம் - *சுற்றம்*
தழலை,தட்டை - *பறவைகளை ஓட்டும் கருவிகள்*
கொத்து - *பூமாலை*
குழல் - *கூந்தல்*
கோலத்து நாட்டார் - *கலிங்க நாட்டார்*
வரிசை - *சன்மானம்*
நாங்கூழ் - *மண்புழு*
காயில் - *வெகுண்டால்*
அயன் - *பிரமன்*
மால் - *விஷ்ணு*
ஆலாலம் - *நஞ்சு*
அந்தம் - *முடிவு*
ஓதுக - *சொல்க*
முழக்கம் - *ஓங்கி உரைத்தல்*
கனிகள் - *உலோகங்கள்*
மணி - *மாணிக்கம்*
படிகம் - *பளபளப்பான கல்*
படி - *உலகம்*
மீட்சி - *விடுதலை*
நவை - *குற்றம்*
கடிநகர் - *காவலுடைய நகரம்*
காண்டி - *காண்க*
பூம்பராகம் - *பூவிலுள்ள மகரந்தம்*
ஆக இலா - *குற்றம் இலாத*
தோட்டி - *துறட்டி*
அயம் - *ஆடு, குதிரை*
புக்க விட்டு - *போக விட்டு*
சீரியதூளி - *நுண்ணிய மணல்*
சிறு கால் - *வாய்க்கால்*
பரல் - *முத்து*
முந்நீர் மடு - *கடலாகிய நீர்நிலை*
அண்டயோணி - *ஞாயிறு*
சாடு - *பாய்*
ஈட்டியது - *சேகரித்தது*
எழிலி - *மேகம்*
நாங்கூழ் புழு - *மண்புழு*
ஓவா - *ஓயாத*
பாடு - *உழைப்பு*
வேதித்து - *மாற்றி*
*நாளெல்லாம் வினைசெய்*
No comments