7 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சொல்லும் பொருளும்
*சொல்லும் பொருளும்*
7 ஆம் வகுப்பு
இரண்டாம் பருவம்.
*மதலை* - தூண்
*ஞெகிழி* - தீச்சுடர்
*அழுவம்* - கடல்
*வேயாமாடம்* - திண்மையாக சாந்து பூசப்பட்ட மாடம்
*சென்னி* - உச்சி, தலை
*உரவுநீர்* - பெருநீர்ப் பரப்பு
*கரையும்*- அழைக்கும்
*உரு*- அழகு
*போழ* - பிளக்க
*வங்கூழ்* - காற்று
*நீகான்*- நாவாய் ஓட்டுபவன்
வங்கம் - கப்பல்
*எல்* - பகல்
*கோடு உயர்* - கரை உயர்ந்த
*மாட ஒள்ளெரி* - கலங்கரை விளக்கம்
*எத்தனிக்கும்* - முயலும்
*வெற்பு* - மலை
*கழனி* - வயல்
*நிகர்*- சமம்
*பரிதி*- கதிரவன்
*அன்னதோர்* - அப்படி ஒரு
*கார் முகில்* - மழை மேகம்
*துயின்றிருந்தார்* - உறங்கியிருந்தார்
*வைப்புழி* - பொருள் சேமித்து வைக்கும் இடம்
*கோட்படா* - ஒருவரால் கொள்ளப்படாது
*வாய்த்து ஈயில்* - வாய்க்கும் படி கொடுந்தலும்
*விச்சை* - கல்வி
*பிருமாக்கள்* - படைப்பாளர்கள்
*நெடி* - நாற்றம்
*மழலை* - குழந்தை
*வனப்பு* - அழகு
*பூரிப்பு* - மகிழ்ச்சி
*மேனி* - உடல்
*வண்கீரை* - வளமான கீரை
*முட்டப்போய்* - முழுதாகச் சென்று
*மறித்தல்* - தடுத்தல்
*பரி* - குதிரை
*கால்* - வாய்க்கால், குதிரையின் கால்
No comments