Header Ads

தமிழ்நாடு புத்தொழில்மற்றும்புத்தாக்க இயக்கம் | Tanseed 6.0 Notofication

 





தமிழ்நாடு புத்தொழில்மற்றும்புத்தாக்க இயக்கம்

தமிழ்நாடு புத்தொழில்ஆதார நிதித்திட்டம் 6 ஆம்பதிப்பிற்கான விண்ணப்பங்கள்பெறப்படுகின்றன


தமிழ்நாடு புத்தொழில்மற்றும்புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில்ஆதார நிதியின்6-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை

பெறத்தொடங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசின்டான்சீட்(TANSEED)  திட்டமானது, தொடக்க நிலையில்உள்ள புத்தொழில்நிறுவனங்களுக்கு உதவும்விதமாக

தொடங்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள்நடைபெற்றுள்ளது. தற்போது 6-ஆம்பதிப்பிற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. டான்சீட் திட்டம்2021 ம்ஆண்டு தொடங்கப்பட்டதில்இருந்து , இதுவரை 132 புத்தொழில்நிறுவனங்களுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின்வழியாக பசுமைத்தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும்பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக்

கொண்ட புத்தொழில்நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில்நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும்வழங்கப்படும்.


மேலும், இத்திட்டத்தில்பயன்பெறும்பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில்வளர்பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள்,தேசிய மற்றும்பன்னாட்டு அளவிலான புத்தொழில்நிகழ்வுகளில்பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும்வழங்கப்படும். இதன்பொருட்டு தமிழ்நாடு புத்தொழில்மற்றும்புத்தாக்க இயக்கமானது 8 சதவீத பங்குகளை உதவி பெறும்புத்தொழில்நிறுவனங்களிடம்இருந்து  பெற்றுக்கொள்ளும்.


புத்தாக்க சிந்தனையுடன்செயல்படக்கூடிய வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்தொழில்மாதிரிகளைக்

கொண்ட , சமூகத்தில்நன்மாற்றங்களை விளைவிக்கும்வகையில் செயல்படக்கூடிய புத்தொழில்நிறுவனங்கள்யாவும்இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் ஒன்றிய அரசின் டி.பி...டி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in  இணையதளத்தின் வழியே, பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினாலும், ஏதேனும் வினாக்கள் இருந்தாலும் tanseed@startup.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


No comments

Powered by Blogger.